தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் ஆந்திரா கடுமையாக போட்டியிட்டதாக ஆந்திர மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார். சில முதலீடுகளை வென்றதாகவும், சிலவற்றை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசின் நேர்மை குறித்து பேசிய அமைச்சர் நாரா லோகேஷ், 'முந்தைய திமுக அரசின் முதலீட்டு நடைமுறைகளின் நேர்மை குறித்து அவர் தெரிவிக்கையில், 'முந்தைய தமிழக அரசு லஞ்சம் கேட்பதாக எந்தவொரு முதலீட்டாளரும் புகார் கூறி நான் கேட்டதில்லை. பாராட்டுக்குரியவைகளை பாராட்டியாக வேண்டும். மிகவும் தூய்மையான, தொழில்முறை சார்ந்த முதலீட்டு நடைமுறையைப் பின்பற்றியது. அது மிகவும் பாராட்டத்தக்கது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எந்த முதலீட்டாளரும் திமுக அரசு லஞ்சம் கேட்டதாக தன்னிடம் கூறியதில்லை என்றும், முதலீடுகளை ஈர்க்க திமுகவுடன் தாங்கள் கடுமையாகப் போட்டியிட்டு சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார். இது மாநிலங்களுக்கு இடையேயான முதலீட்டுப் போட்டி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மனிதவளம் மேம்பாட்டுத் துறை அமைச்சரான நாரா லோகேஷ், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்றும் திமுக அரசின் அணுகுமுறையை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கருத்துக்கள் முதலீட்டுச் சூழலில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.