MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் போராட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் போராட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் போராட்டம்

லைஃப் ஸ்டைல்

மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் போராட்டம்

Admin
Last updated: ஜூன் 23, 2026 6:47 காலை
Admin
Share
SHARE

மதுரை மேலூர் மற்றும் விருதுநகர் சிவகாசி ஆகிய இடங்களில் மகப்பேறு சிகிச்சையின் போது பெண்கள் உயிரிழந்ததை அடுத்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து, தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து தமிழக மகளிர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் அமலாதேவி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'இந்த இயற்கை மரணங்களை திட்டமிட்ட படுகொலையாக சித்தரித்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அவர்களின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சிவகாசியில் அதிக ரத்தம் உறைதல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெண் உயிரிழந்தார். மேலூரில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸார் இருந்தும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது' என தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை சொத்துக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும், தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவசர உதவிக்கு போலீஸ், சட்ட நிபுணர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். பிரசவத்தின் போதும், சிகிச்சையின் போதும் நிகழும் மரணங்களை வைத்து பணம் பறிக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மரணம் ஏற்படும் பட்சத்தில் வீண் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக உடற்கூறாய்வு செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மகப்பேறு மருத்துவர்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர். அன்றைய தினம் வெளிநோயாளிகள் பிரிவு (OP) சிகிச்சையும் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு (IP) ஆகியவை வழக்கம்போல் இயங்கும். தமிழகம் முழுவதும் சுமார் 4,500 மருத்துவர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தப் போராட்டம் அடுத்தகட்டமாக தீவிரமடையும் என டாக்டர் அமலாதேவி தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Doctors StrikeTamil Naduதமிழ்நாடுமகப்பேறு மருத்துவர்கள்மருத்துவர் பாதுகாப்புவேலைநிறுத்தம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் – ஈராக் ஆட்டம் மழையால் நிறுத்தம்
Next Article காங்கிரஸ் தலைவர் மாற்றம்: யார் அந்த மூத்த தலைவர்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகிறார்

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின் பெயரை கேட்டாலே பயங்கரவாதிகளே நடுங்குவார்கள்'…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

ஜந்தர் மந்தர்: டெல்லியின் அறிவியல் மையத்திலிருந்து போராட்டக் களமாக மாறிய கதை

டெல்லியின் ஜந்தர் மந்தர், ஒரு காலத்தில் வானியல்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி பிரச்சாரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி ஜூன் 17 முதல் நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்குகிறார். மாணவர் மாநாடுகள் மற்றும் பரப்புரைகள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் முருகபக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக தவெக அரசு போர்க்கொடி தூக்குவதுதான் மதநல்லிணக்க அரசியலா என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுக திட்டங்களை பெயர் மாற்றி அறிவிக்கிறார்கள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தற்போதைய வேளாண் பட்ஜெட்டை 'லேபிள், ஸ்டிக்கர் ஆட்சி' என விமர்சித்துள்ளார். திமுக திட்டங்களை பெயர் மாற்றி அறிவிப்பதாகவும், நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

வெங்கடேஷ், கல்யாண் ராம் இணையும் புதிய படம்: ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்!

நடிகர்கள் வெங்கடேஷ், கல்யாண் ராம் மற்றும் இயக்குநர் அனில் ரவிபுடி இணையும் புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?