சென்னை: யார் நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என்பதை இந்த தேர்தல் தெளிவாக காட்டியுள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து முஸ்லீம் லீக் விலகியது குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்த தேர்தல், யார் உண்மையான நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. தவெக அமைச்சரவையில் ஐயூஎம்.எல். இடம்பெற்றுவிட்டதால், அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மதிமுகவும் முஸ்லீம் லீக்கின் முடிவையே எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் பலம் தங்களுக்கு தெரியும் என்றும், பதவி ஆசையால் சில கூட்டணி கட்சிகள் விலகிச் சென்றுவிட்டதாகவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சில கட்சிகள் பலியாகிவிட்டதாகவும், தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தால் திமுக கூடுதல் இடங்களில் போட்டியிட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.