MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொடர் மின்வெட்டுக்கு தீர்வு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொடர் மின்வெட்டுக்கு தீர்வு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தொடர் மின்வெட்டுக்கு தீர்வு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

லைஃப் ஸ்டைல்

தொடர் மின்வெட்டுக்கு தீர்வு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Admin
Last updated: ஜூன் 16, 2026 4:59 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் போதுமான அளவில் உள்ளதால், மின்சாரப் பற்றாக்குறை இல்லை என்றும், இருப்பினும், சென்னை உள்ளிட்ட சில நகர்ப்புறங்களில் பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள் மற்றும் சாலைப் பணிகளின்போது மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 231 புதிய துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மையங்கள், 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 'மின்னகம்' (9498794987) மூலம் 24 மணி நேரமும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் புகார்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள், புதிய அனல்மின் நிலையம் மற்றும் நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையையும் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்க உறுதிப் பூண்டுள்ளது.

இக்கூட்டத்தில், முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மின் பழுது காரணமாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்திட அறிவுறுத்தினார். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்திடவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் ஆணையிட்டார். சென்னையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தி, அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பழுதினைச் சரி செய்திடவும், பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்றிட வேண்டுமெனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:power cutTamil Naduஎரிசக்தித்துறைதமிழ்நாடுமின்வெட்டுமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Next Article கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம்: அமைச்சர் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

6 நாட்கள் கடலில் தத்தளிப்பு: சிறுநீர் குடித்து உயிர் பிழைத்த மீனவர்கள்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் 6 நாட்கள் கடலில் தத்தளித்த நிலையில், சிறுநீர் குடித்து உயிர் பிழைத்ததாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவர்கள் தற்போது கடலூர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போக்குவரத்து ஊழியர் DA நிலுவை: உடனடியாக வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்…

1 Min Read
தமிழ்நாடு

சேலம் வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம்: பராமரிப்பு பணி அறிவிப்பு

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்-டாட்டா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அமைச்சருக்கு இணையாக அமர்ந்த தவெக நிர்வாகி: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு ஆய்வுக்கூட்டத்தில், அரசு பதவியில் இல்லாத தவெக மாவட்ட செயலாளர் அமைச்சருக்கு இணையாக அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?