MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 12, 2026 7:22 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை கண்டித்து, விழுப்புரத்தில் வரும் 19ஆம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்றும் வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், 'கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000/-த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்' என அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு.

மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 19.6.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. பசுபதி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விவசாயப் பெருங்குடி மக்கள் நலனையும், பொதுமக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMK Protestஅதிமுகஆர்ப்பாட்டம்தவெகமின்வெட்டுவிவசாயிகள் கடன் தள்ளுபடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாகிஸ்தானில் அதிர்ச்சி: 7 கோடி பேர் ஏழைகள், 6 ஆண்டுகளில் 7% உயர்வு
Next Article தாம்பரம் – போடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

வீட்டில் கை, கால்களுக்கு அழகு குறிப்புகளைப் பயன்படுத்தும் பெண்
லைஃப் ஸ்டைல்

வீட்டிலேயே கை, கால்களை பளிச்சுனு மாற்றலாம்: எளிய வழிகள்!

வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு கை, கால்களை பளிச்சென்று மாற்றலாம். பார்லருக்கு செல்லாமலேயே இயற்கையான முறையில் அழகு பெற எளிய வழிகள்.

2 Min Read
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாடு

டெல்லி மாணவர்களுக்கு தவெக துணை நிற்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

செங்கல்பட்டு அருகே விளையாட்டு விடுதி திறப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். மாணவர்களை போதைப்பழக்கத்தில் இருந்து மீட்க விளையாட்டு அவசியம் என்றும், நீட் தேர்வு ரத்து…

2 Min Read
தமிழ்நாடு

வீட்டில் கஞ்சா வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: பரபரப்பு!

சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு இலக்குக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் நடப்பது விமர்சனங்களை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

துரோகி விஜயபாஸ்கர் ஒழிக – அதிமுகவினர் கொண்டாட்டம்

விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, புதுக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக' என கோஷமிட்டனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?