MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விருச்சிக ராசி: 2026 ஆனி மாத ராசிபலன் – சிறப்பு கணிப்புகள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விருச்சிக ராசி: 2026 ஆனி மாத ராசிபலன் – சிறப்பு கணிப்புகள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விருச்சிக ராசி: 2026 ஆனி மாத ராசிபலன் – சிறப்பு கணிப்புகள்

லைஃப் ஸ்டைல்

விருச்சிக ராசி: 2026 ஆனி மாத ராசிபலன் – சிறப்பு கணிப்புகள்

Admin
Last updated: ஜூன் 11, 2026 2:42 மணி
Admin
Share
SHARE

விருச்சிக ராசி அன்பர்களே! பராபவ வருடம் ஆனி மாத கிரக நிலைகளின்படி, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டிலேயே சஞ்சரிக்கிறார். அஷ்டம லாபாதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை' உருவாக்குகிறார். தன – பஞ்சமாதிபதியான குரு உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். முக்கிய நபர்கள் உங்களை தேடி வந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவர்.

குருவின் பார்வையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தலைமைப் பதவிகளும் தானாக உங்களைத் தேடி வரும். திருமணக் கனவுகள் நனவாகும். ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், ஒப்பற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரும். நண்பர்களின் துணையுடன் நீங்கள் செய்யும் காரியங்கள் சிறக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தென்படும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாடகை கட்டிடத்தில் இருந்து சொந்தக் கட்டிடத்திற்கு தொழிலை மாற்றும் முயற்சி கைகூடும். சந்தர்ப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்ரன், ஆனி 21-ந் தேதி (5.7.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வெளிநாட்டு முயற்சிகள் அனுகூலம் தரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும் வகையில் அமையும். அதிகாரிகள் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீன ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உடன்பிறப்புகளின் அனுசரிப்பு குறையும். சிலருக்கு ஊர் மாற்றம், வீடு மாற்றம் உருவாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை தக்க வைத்துக்கொள்வது நல்லது. உச்ச குருவின் பார்வை பெற்ற சனி என்பதால், இக்காலத்தில் நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். வியாபாரம் மற்றும் தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு அடுக்கடுக்காக ஒப்பந்தம் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும். பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: ஜூன்: 17, 18, 19, 23, 24, 29, 30, ஜூலை: 5, 6, 15, 16. மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026 ஆனி மாத பலன்Tamil Horoscopeராசிபலன்விருச்சிக ராசிஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருச்செந்தூர்-நெல்லை ரயில் 3 நாட்கள் ரத்து அறிவிப்பு
Next Article சுப்மன் கில்: உலக சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய கேப்டன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தனுஷ்-மம்மூட்டி இணையும் D55 பட டைட்டில் நாளை அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் மம்மூட்டியும் நடிக்கிறார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விசிக மாநில செயலாளர் சங்கத்தமிழன் 3 மாதங்கள் இடைநீக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
வீட்டிலேயே ரிமோட் கண்ட்ரோலை சரிசெய்யும் நபர்
லைஃப் ஸ்டைல்

ரிமோட் வேலை செய்யலையா? 10 நிமிடத்தில் வீட்டிலேயே சரிசெய்ய டிப்ஸ்!

ரிமோட் கண்ட்ரோல்கள் திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டால், அதை உடனடியாக தூக்கி எறிந்துவிட வேண்டாம். சிறு சிறு பிரச்சனைகளால் அவை செயலிழக்கக்கூடும். இவற்றை வீட்டிலேயே எளிதாக சரிசெய்ய…

2 Min Read
மதுரை கள்ளழகர் கோவில் திருவிழா கொடியேற்றம்
லைஃப் ஸ்டைல்

கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: தேரோட்டம் 29-ல்

மதுரை கள்ளழகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 29-ம் தேதி நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?