ஈரானின் தாக்குதல் எதிரொலியாக குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், குவைத்திற்கு வரவிருந்த விமானங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஈரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் தாக்குதல் சம்பவங்களால், குவைத் விமான நிலையத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த தற்காலிக மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை சீரடையும் வரை விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும், இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.