திமுகவின் தயவில் எம்.பி. பதவி பெற்ற சீமான், ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுவது சரியல்ல என்றும், அப்படி சீமான் ராஜினாமா செய்தால் தானும் ராஜினாமா செய்வதாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக எந்த திசையில் செல்கிறது என்பதைப் பாருங்கள். உண்மையான திமுகவினர் வீட்டில் இருக்கிறார்கள். வசூலுக்காக அழைத்து வரப்பட்டவர்களையே வைத்து கட்சி நடத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருக்கும்போது வந்தவர்கள் புதிது புதிதாக கிளம்பியிருக்கிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் எப்போது சீமானுக்கு சீர் கொண்டுபோனாரோ அப்போதே ஏதோ டீலிங் நடப்பது தெரிந்தது. சீர் என்ற பெயரில் பெட்டி சென்றதால் சீமான் இப்படி பேசுகிறார்.
30 நாட்களாக சீமான் கதறுகிறார். திமுக தயவில் பெற்ற எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார். காங்கிரஸ் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற உங்கள் தம்பி உதயநிதியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். அதை சீமான் ஏற்பாரா? சொந்த மாவட்டத்தில் டெபாசிட் வாங்க முடியாதவர் வீர வசனம் பேசுகிறார். தேர்தல் கொடுத்த அதிர்ச்சியால் உதயநிதியிடம் இருந்து வந்த புலம்பல் தற்போது சீமானிடம் இருந்து வருகிறது. நாக்கை அடக்கிப் பேசினால் சீமானுக்கு மரியாதை கிடைக்கும். திமுக அடித்த கமிஷனை கூட்டணி தர்மத்துக்காக வெளியே சொல்லவில்லை" என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.