MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 501 ரன் அடித்த படிதாருக்கு டி20 அணியில் இடமில்லை: ஹர்பஜன் சிங் அதிருப்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 501 ரன் அடித்த படிதாருக்கு டி20 அணியில் இடமில்லை: ஹர்பஜன் சிங் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 501 ரன் அடித்த படிதாருக்கு டி20 அணியில் இடமில்லை: ஹர்பஜன் சிங் அதிருப்தி

விளையாட்டு

501 ரன் அடித்த படிதாருக்கு டி20 அணியில் இடமில்லை: ஹர்பஜன் சிங் அதிருப்தி

Admin
Last updated: ஜூன் 8, 2026 2:27 மணி
Admin
Share
SHARE

நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று கொடுத்து, ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோருக்குப் பிறகு தொடர்ந்து 2 முறை கோப்பையை வென்ற 3-வது கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றுள்ளார். பேட்டிங்கிலும் அசத்திய அவர், 14 இன்னிங்ஸ்களில் 192.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 501 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில், அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரஜத் படிதார் புறக்கணிக்கப்பட்டதற்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 16 பேர் கொண்ட புதிய டி20 அணியை அறிவித்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி தேசிய அணிக்குத் தேர்வாகி சாதனை படைத்தார்.

இவ்வளவு சிறப்பாக விளையாடியும் அவர் அணியில் சேர்க்கப்படாதது குறித்து ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், 'இந்திய அணியில் ரஜத் படிதாருக்கு இடம் கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது. தேசிய அணியில் இடம்பிடிக்க அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்? 501 ரன்கள் குவித்துள்ளார், அவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200 ஆக உள்ளது. அவரைத் தேர்வு செய்யாதது முற்றிலும் அநீதியானது. இந்திய அணியின் நடுத்தர வரிசைக்கு அவர் மிகவும் தகுதியான வீரர். நல்ல பேட்டிங் நுட்பம் கொண்ட ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரர் அவர்' என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ரஜத் படிதார் போன்ற திறமையான வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். அணித் தேர்வின்போது நாங்கள் பல வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து விரிவாக விவாதித்தோம். தற்போதுள்ள 15 வீரர்கள் தகுதியானவர்கள் என்று கருதுகிறோம். இந்தியாவில் ஏராளமான சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அணியில் நுழையத் தகுதியானவர்கள்தான். சிறந்த அணியை உருவாக்கும்போது சில வீரர்கள் விடுபடுவது தவிர்க்க முடியாதது' என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cricketஐபிஎல்கிரிக்கெட்டி20 அணிரஜத் படிதார்ஹர்பஜன் சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: ரூ.95.35 ஆக வீழ்ச்சி!
Next Article முதல்-அமைச்சர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்து நெரிசலில் விற்கப்படும் 'டிராஃபிக் வடா பாவ்'

மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!

மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக் வடா பாவ்' என்ற உணவு…

ஜூலை 24, 2026

இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ…

ஜூலை 24, 2026

போலீஸ் தாக்குதலில் மாணவர் கண் பறிப்பு: தர்மேந்திர பிரதான் பதவி நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு…

ஜூலை 24, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மத்திய அரசுக்கு அவகாசம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி…

ஜூலை 24, 2026

டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி…

ஜூலை 24, 2026

You Might Also Like

விளையாட்டு

விராட் கோலியுடன் விளையாடிய 36 வயதான பஞ்சாப் பவுலர் காலமானார்.. யுவராஜ் சிங் இரங்கல்

பஞ்சாப் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில், 36 வயதில் காலமானார். அவரது மறைவு கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு…

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்வதைக் குறிக்கும் படம்
விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து: 3வது ஒருநாள் போட்டி – இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் ஆலோசனைகளை…

2 Min Read
விளையாட்டு

பிசிசிஐ இனி RTI கீழ் வராது: மத்திய அரசு தீர்ப்பு – பரபரப்பு தகவல்!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வராது என மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இது பிசிசிஐ-யின் செயல்பாடுகளை…

2 Min Read
விளையாட்டு

ஏசி அறையை விட்டு வெளியே வாங்க: பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு அக்யுப் ஜாவித் எச்சரிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து விமர்சிப்பதை நிறுத்தி மைதானத்திற்கு வர வேண்டும் என மூத்த தேர்வாளர் அக்யுப் ஜாவித் எச்சரித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?