MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்

அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்

Admin
Last updated: மே 27, 2026 8:01 காலை
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், இன்பதுரை உள்ளிட்டோர், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று மனு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி கடிதம் அளித்திருந்தார். அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கும்போதே, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் அச்சத்தால் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய கடிதம் ஆய்வில் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானது. எனவே, அவர்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என மனு அளித்துள்ளோம். காலையில் ராஜினாமா செய்தவர்களுக்கு 5 நிமிடங்களில் கட்சியில் சேர்த்து உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா எனத் தெரியவில்லை. இந்த அரசு குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். தூய்மையான ஆட்சியை தருவதாக கூறிய முதலமைச்சர், முறைகேடாக பின்வாசல் வழியாக தனது ஆட்சியை நிலைநிறுத்த குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துகிறார். ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தவறை உணர்ந்து, பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கோரி, பழனிசாமி தலைமையையும் ஏற்றுக்கொள்வதாக கடிதம் அளித்துள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பதே உண்மை.

இன்பதுரை மேலும் கூறுகையில், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த பிறகும், அதை மீறி பேரவைத் தலைவர் எப்படி ராஜினாமாவை ஏற்க முடியும்? அறிவிப்பு வந்த பிறகுதான் ராஜினாமா செல்லுபடியாகும். அறிவிப்பு வருவதற்கு முன்பே அவர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்துள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த ராஜினாமாவை ஏற்கக்கூடாது. சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அவர்கள் பொய்யாக நம்புகிறார்கள். இது தவறு. எந்த அரசாணை வெளியிட்டாலும் அதை திரும்பப் பெறும் அதிகாரம் இருக்கிறது என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எம்எல்ஏதவெகராஜினாமா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பழங்கள்
Next Article காமன்வெல்த் செஸ்: இந்திய வீரர் இனியன் இரட்டை சாம்பியன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

போதை கலாசாரத்தை தடுக்கவே தெரியும்: முதல்வர் விஜய்

போதை கலாசாரத்தை தடுக்கவே தெரியும், அதை வளர்க்க தெரியாது என முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்படுவதாக அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலை கட்சி தொடக்கம்: பாஜக அவசர ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி எச்சரித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

உள்ளாட்சி தேர்தல் சவால்: ஆதவ் அர்ஜூனாவிற்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி

ஆதவ் அர்ஜூனாவின் உள்ளாட்சி தேர்தல் சவாலுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.வின் போராட்ட வரலாற்றை முன்வைத்து பதிலடி கொடுத்துள்ளார். த.வெ.க.விற்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?