நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இந்தி திரையுலகில் நடித்துள்ள 'ரஃப்தார்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா, ரஜத் கபூர் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படத்தை ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவின் மனைவியும் நடிகையுமான பத்ரலேகா, தனது காம்பா ஃபிலிம் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கல்வித்துறையில் நடக்கும் பேராசை, பணம், அதிகாரம் போன்ற பிரச்சனைகளை மையமாக கொண்டு, ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலான காதல் மற்றும் லட்சிய போராட்டத்தை விவரிக்கும் ஒரு டிராமா திரைப்படமாக உருவாகியுள்ளது.
முதலில் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'ரஃப்தார்' திரைப்படம், தற்போது ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வித்துறையின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், அதன் கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பால் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தேதி அறிவிப்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
