இன்று 09-11-2026, உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு, இன்று விடாமுயற்சியுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாருக்கும் சாட்சி கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்தாலும் அவை நீங்கும். போராடி வெற்றி பெறும் நாளாக அமையும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 9ம் அமையும்.
ரிஷபம் ராசிக்காரர்கள், இன்று பொதுவாக அன்றாடப் பணிகளைக் கவனித்து நிதானமாக இருக்க வேண்டும். பெரியவர்களின் சொல்படி நடந்தால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளை உங்கள் சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம் மற்றும் இளஞ்சிவப்பும், அதிர்ஷ்ட எண்களாக 2, 5ம் அமையும்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு, இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டால் சச்சரவுகளைத் தவிர்க்கலாம். ஆசையைக் குறைத்து அன்றாடப் பணிகளைச் செய்தால் நல்ல அனுகூலங்கள் வந்து சேரும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 2, 6, 9ம் அமையும்.
கடகம் ராசிக்காரர்களுக்கு, இன்று அகலக்கால் வைத்தால் அவதி நிச்சயம். இருப்பினும், தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். எதிர்காலத்திற்குத் தேவையான ஒரு பயனுள்ள பயணத்தை மேற்கொள்வீர்கள். பகைவர்கள் உங்களுக்குப் பணியக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு, நிலம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும் முகநிலை உருவாகும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம் மற்றும் சிவப்பும், அதிர்ஷ்ட எண்களாக 3, 5, 7ம் அமையும்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு, இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நன்மை நடக்கும். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகளைத் தவிர்க்க முடியாமல் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 1, 6, 9ம் அமையும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு, இன்று முழுமையான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் ஏற்படாது. அன்றாடப் பணிகள் சீராக நடைபெறும். உற்சாகத்துடன் நாளைக் கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள், நீலம், வெள்ளை நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 2, 6, 9ம் அமையும்.
துலாம் ராசிக்காரர்கள், இன்று நன்மைகளை அனுபவத்தின் மூலம் பெறுவீர்கள். உறவினர்களால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜ நிலையில் இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள், பச்சை, வெள்ளை நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 5, 9ம் அமையும்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, இன்று அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளை மற்றும் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 1, 2, 7ம் அமையும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு, இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 1, 6, 9ம் அமையும்.
மகரம் ராசிக்காரர்களுக்கு, இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் குருவின் இருப்பால் அவை நீங்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள், நீலம், வெள்ளை நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 2, 6, 9ம் அமையும்.
கும்பம் ராசிக்காரர்கள், இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவது நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள், பச்சை, வெள்ளை நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 5, 9ம் அமையும்.
மீனம் ராசிக்காரர்களுக்கு, இன்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சில நேரங்களில் விபரீதமான எண்ணம் தோன்றலாம், கவனம் தேவை. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளை மற்றும் நீலமும், அதிர்ஷ்ட எண்களாக 1, 2, 7ம் அமையும்.
