MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே.. தீபக் சாஹர் திரும்புவாரா? அஸ்வின் கணிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே.. தீபக் சாஹர் திரும்புவாரா? அஸ்வின் கணிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே.. தீபக் சாஹர் திரும்புவாரா? அஸ்வின் கணிப்பு

விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே.. தீபக் சாஹர் திரும்புவாரா? அஸ்வின் கணிப்பு

Sri Prem Kumar R
Last updated: நவம்பர் 1, 2026 6:23 காலை
Sri Prem Kumar R
Share
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகிறார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
SHARE

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வர்த்தக முறையில் ஒப்பந்தம் செய்வதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், ஹர்திக்கைப் பெறுவதற்கு சிஎஸ்கே எந்த வீரர்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர் சிவம் துபேவை தர முன்வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அது மட்டும் போதாது என அஸ்வின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெறும் சிவம் துபேவை மட்டும் வாங்கிக் கொண்டு ஹர்திக் பாண்டியாவை விட்டுக்கொடுக்க நிச்சயம் சம்மதிக்காது என்றும், துபேவுடன் சேர்த்து ஆயுஷ் மத்ரேவையும் மும்பை அணி உறுதியாகக் கேட்கும் என்றும், மத்ரே இல்லாமல் இந்த வர்த்தகம் அடுத்த கட்டத்திற்கு நகராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிஎஸ்கே அணிக்கு இருக்கும் மாற்று வழிகளையும் அஸ்வின் பட்டியலிட்டார். ஒருவேளை ஆயுஷ் மத்ரேவை தர சிஎஸ்கே மறுத்தால், அதற்குப் பதிலாக சிவம் துபேவுடன் சேர்த்து வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸை தரலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். எல்லிஸ் அணிக்கு வந்தால், பும்ராவுடன் இணைந்து டெத் ஓவர்களில் பந்துவீச மும்பைக்குப் பலம் கிடைக்கும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

அதற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், சிவம் துபே, நாதன் எல்லிஸ் ஆகியோருடன் விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேலையும் சேர்த்து மூன்று வீரர்களை சிஎஸ்கே வழங்கலாம் என்றும் அஸ்வின் ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பரும் கிடைப்பார் என்றும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தால் மறுக்கவே முடியாத அளவிற்கு வலுவான சலுகையை சிஎஸ்கே கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையில் பல வீரர்களை உள்ளடக்கிய ஒரு மெகா வர்த்தகம் நடக்கலாம் என்றும் அஸ்வின் கணித்துள்ளார். சிஎஸ்கே அணி துபே, எல்லிஸ், உர்வில் மற்றும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை வழங்கி, அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து, தங்களது முன்னாள் வீரரான தீபக் சாஹரையும் திரும்பப் பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு புதிய பந்து வீச்சாளரும், பழைய அனுபவமும் கிடைக்கும் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2027 தக்கவைப்புப் பட்டியலை வெளியிட நவம்பர் 15 கடைசி நாளாக உள்ள நிலையில், இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ரசிகர்களிடையே மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது.

முன்னதாக, 'அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷனுக்கு அநீதி இழைக்கிறார்கள்' என யுவராஜ் சிங் ஆதங்கம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என மார்தட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதும் செய்தியாகியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CSKDeepak ChaharHardik PandyaIPL 2027Mumbai IndiansRavichandran Ashwinஐபிஎல் 2027சென்னை சூப்பர் கிங்ஸ்தீபக் சாஹர்மும்பை இந்தியன்ஸ்ரவிச்சந்திரன் அஸ்வின்ஹர்திக் பாண்டியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் புவனேஸ்வர் குமார் நீக்கம் தவறு: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
Next Article வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு குறித்த செய்தி வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு: நுகர்வோருக்கு அதிர்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் பள்ளிக்குள் மாணவியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்

ஆந்திராவில் பள்ளிக்குள் புகுந்து மாணவியை வெட்டிய இளைஞர் கைது

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு…

நவம்பர் 1, 2026

மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தல்: ஹர்தீப் சிங் புரி வேட்புமனு தாக்கல்

மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், மத்திய…

நவம்பர் 1, 2026

INS விக்ராந்த்: ரஃபேல் போர் விமானம் முதல் தரையிறக்கம்

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்…

அக்டோபர் 31, 2026

ஆந்திராவில் புயல் பாதிப்பு: முதல்வர் நேரில் ஆறுதல்

ஆந்திர கடலோர பகுதிகளை தாக்கிய 'அர்னாப்' புயலால்…

அக்டோபர் 31, 2026

ரேவந்த் ரெட்டி ஆட்சி முடியும் வரை பாத யாத்திரை: பாஜக எம்பி அறிவிப்பு

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி…

அக்டோபர் 31, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்
விளையாட்டு

கோலியை சுதந்திரமாக ஆட விடுங்கள்: கேப்டன் சுப்மன் கில் ஓபன் டாக்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி போன்ற வீரரை சுதந்திரமாக…

3 Min Read
முன்னாள் இந்திய வீரர் ராஜு குல்கர்னி
விளையாட்டு

பும்ராவின் பந்துவீச்சு டெக்னிகல் சரியில்லை: முன்னாள் வீரர் ராஜு குல்கர்னி சர்ச்சை

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு நுட்பம் சரியில்லை என்றும், அதனால் அடிக்கடி காயமடைகிறார் என்றும் முன்னாள் வீரர் ராஜு குல்கர்னி விமர்சித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில்…

2 Min Read
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிவுக்கு ஆகிப் ஜாவேக்தான் காரணம்: ஆஸி. வீரர் கில்லெஸ்பி

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய சீரழிவுக்கு ஆகிப் ஜாவேக்தான் காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி கடுமையாகச் சாடியுள்ளார். வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் அணித்…

3 Min Read
இந்தியா மற்றும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
விளையாட்டு

இந்தியா – இலங்கை டெஸ்ட்: படிக்கல் சதம், ராகுல் அரைசதம்!

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில், தேவ்தத் படிக்கல் 165 ரன்கள், கே.எல். ராகுல் 82 ரன்கள் எடுக்க, இந்திய அணி 353/4 ரன்கள் குவித்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?