MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொல்கத்தா துர்கா பூஜை நெரிசல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொல்கத்தா துர்கா பூஜை நெரிசல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கொல்கத்தா துர்கா பூஜை நெரிசல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

இந்தியா

கொல்கத்தா துர்கா பூஜை நெரிசல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

Fernandez
Last updated: அக்டோபர் 18, 2026 12:39 மணி
Fernandez
Share
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம்
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்
SHARE

கொல்கத்தாவின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு தலா ரூ.25 லட்சமும், மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளது.

நேற்று (அக்.17) கொல்கத்தாவின் சோர்பகன் துர்கா பூஜை பந்தலில், பலத்த மழையின் போது மக்கள் கூட்டம் திடீரென முண்டியடித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொல்கத்தா காவல்துறையினர், அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து, தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேரை காவல்துறையினர் காவலில் எடுத்துள்ளனர். இவர்களில் பூஜை கமிட்டி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், காவல்துறையினர், தற்காலிக ஊர்க்காவல் படையினர் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் அடங்குவர்.

மேற்கு வங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து கள நிலவரத்தை கேட்டறிந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், நள்ளிரவு வரை அங்கிருந்தார். இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்படும் என முதல்வர் சுவேந்து அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் சுவேந்து கூறுகையில், 'இந்தச் சம்பவத்தில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது. இதன் விசாரணையில் சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் இடம்பெறும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியும், அரசுப் பணியில் ‘குரூப்-டி’ நிலையிலான வேலையும் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

முதல்வருடன் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாநகரக் காவல் ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர், மாநில அமைச்சர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (அக்.18) மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவிருந்த தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார். காயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக அவர் இன்று மருத்துவமனைக்குச் செல்கிறார். இது குறித்து அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், 'சோர்பகன் சர்வஜனீன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசலில் பலர் பாதிக்கப்பட்டனர் என்பதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இது தொடர்பாக முதல்வர் மற்றும் சுவேந்து அதிகாரியிடம் பேசினேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசல் போன்ற சூழல் குறித்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். 'சர்பகான் பூஜா பந்தலில் ஏற்பட்ட நெரிசல் குறித்த செய்தியறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான மன வலிமையும் தைரியமும் கிடைக்கட்டும் என்று அன்னை துர்கையிடம் வேண்டிக்கொள்கிறேன்' என அவர் கூறியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amit ShahDurga PujaKolkataMamata BanerjeeStampedeWest Bengal CM Suvendu Adhikariஅமித் ஷாகூட்ட நெரிசல்கொல்கத்தாதுர்கா பூஜைமம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய அரசு சேமிப்பு திட்டத்தை விளக்கும் படம் மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.13 கோடி வரை பெறலாம்: மத்திய அரசு திட்டம்!
Next Article விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உரையாடுவது விராட் கோலி ஆணவக்காரர் என நினைத்தேன்: ஏபி டிவில்லியர்ஸ் பரபரப்பு தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம்

கொல்கத்தா துர்கா பூஜை நெரிசல்: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

அக்டோபர் 18, 2026

ராஜஸ்தானில் வேன் கவிழ்ந்து 8 பேர் பரிதாப பலி

ராஜஸ்தானில் டெம்போ டிராவலர் வேன் 15 அடி…

அக்டோபர் 18, 2026

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலில் வன்முறை, துப்பாக்கிச் சூடு

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு…

அக்டோபர் 18, 2026

ஜம்மு காஷ்மீர்: குப்வாராவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், இந்திய எல்லைக்குள்…

அக்டோபர் 18, 2026

கோவில் நிலத்தை தானமாக பெற முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கோவில் சொத்துக்களை அறங்காவலர்களிடமிருந்து அரசு தானமாகப் பெறுவது…

அக்டோபர் 18, 2026

You Might Also Like

தனியார் பள்ளி ஒன்றில் பிரீ-கேஜி சேர்க்கைக்கான கட்டணப் பட்டியல்
இந்தியா

2 வயது குழந்தைக்கு ₹1.5 லட்சம் நன்கொடை: கல்விக் கொள்ளை அம்பலம்!

அகமதாபாத்தில் 2 வயது குழந்தைக்கு பிரீ-கேஜி சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கேட்ட தனியார் பள்ளி. பெற்றோர்கள் கல்விக் கொள்ளை என கண்டனம்.

2 Min Read
இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள் ஏவுதல்
இந்தியா

இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-05, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது இந்தியாவின் முதல் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாகும்.

1 Min Read
அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
இந்தியா

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1.55 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக…

2 Min Read
சபரிமலை அய்யப்பன் கோவில்
இந்தியா

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, பாரம்பரிய வெடி வழிபாடு சடங்கை நிறுத்த வனத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?