கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த டோனி என்ற விவசாயி, தனது மனைவி ரெஜிமோல், ஒரு வயது மகள் எலிசா மற்றும் ரோசி என்ற வளர்ப்பு நாயுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை, டோனி குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, சமையலறைக்குள் திடீரென ஒரு நல்ல பாம்பு புகுந்தது. இதைக் கண்ட ரோசி நாய், உடனடியாக பாம்பை நோக்கி குரைக்கத் தொடங்கியது. சத்தம் கேட்டு டோனி சமையலறைக்குச் சென்று பார்த்தபோது, பாம்பு படம் எடுத்து ஆடியபடி அவரை எதிர்கொண்டது. அதிர்ச்சியடைந்த டோனி, நாயை வெளியே வருமாறு அழைத்தார். ஆனால், ரோசி நாய் தன் எஜமானரைக் காக்கும் நோக்கில் பாம்புடன் சண்டையிடத் தொடங்கியது. பாம்பைப் பிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த சினோ என்பவரை டோனி அழைத்தார். ஆனால், சினோ பாம்பை நெருங்க விடாமல் ரோசி தடுத்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, ரோசி நாய் பாம்பைக் கடித்துக் கொன்றது. இந்த சண்டையில் பாம்பு கடித்ததால் காயமடைந்த ரோசி நாயை, டோனி உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டோனி கூறுகையில், 'பாம்பு வீட்டுக்குள் வந்ததை ரோசி எச்சரிக்காமல் இருந்திருந்தால், நானும் என் மனைவியும் சமையலறைக்குள் சென்றிருப்போம். அப்போது பாம்பு எங்களை கடித்திருக்கக்கூடும்' என்று தெரிவித்தார். எஜமானரைக் காக்க தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பாம்புடன் போராடிய ரோசி நாயின் விசுவாசத்தையும் தைரியத்தையும் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை