72வது தேசிய விருதுகள்: ‘ராயன்’ சிறந்த தமிழ் படம், ‘அமரன்’ படத்துக்கு 3 விருதுகள்!

72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், நடிகர் தனுஷ் இயக்கிய 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

'அமரன்' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதே படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும், கலைவாணன் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். இது 'அமரன்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

'புஷ்பா 2' திரைப்படத்திற்காக ஷீத்தல் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும், இதே படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்ரீகாந்த்' பட இயக்குநர் துஷார் ஹிராந்தானிக்கு சிறந்த இந்தி படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் தனுஷுக்கு 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கு சமூக மற்றும் தேசிய நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படம் என்ற பிரிவிலும் ஒரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிரம்மயுகம்' திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே படத்திற்காக மும்முட்டி சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். 'சுதந்திர வீரசாவர்க்கர்' திரைப்படத்தின் இயக்குநர் ரந்தீப் ஹூடாவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'மகாராஜா' படத்திற்காக அனல் அரசு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதே படத்திற்காக சாச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். 'ஆர்ட்டிகல் 370' படத்தில் நடித்ததற்காக யாமி கௌதம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

'மெய்யழகன்' படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுரேனுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 'ஏ.ஆர்.எம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அங்கு வான கோனிலு' என்ற பாடலுக்காக வைக்கம் விஜயலஷ்மிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'பெமினிச்சி பாத்திமா' என்ற மலையாளப் படத்திற்கு இயக்குநர் ஃபாசில் முகமது சிறந்த மலையாளப் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளார். 'மித்யா' என்ற கன்னடப் படத்திற்கு அறிமுக இயக்குநர் சுமந்த் பட் சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். 'BLUE' என்ற தமிழ் படத்திற்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version