சட்டசபையில் 67 புதிய அறிவிப்புகள்: வீடற்றவர்களுக்கு வீடு, இலவச சோலார் அடுப்பு!

சட்டசபையில் 67 புதிய அறிவிப்புகளை வெளியிடும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு

சட்டப்பேரவையில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 67 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் வீடற்றவர்களுக்கு வீடு கட்டுவது முதல் இலவச சோலார் அடுப்புகள் வழங்குவது வரை பல முக்கிய திட்டங்களை உள்ளடக்கியுள்ளன.

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் 100 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், பள்ளிகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பராமரிப்புத் தொகை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் ஒரு புதிய வணிக மையம் அமைக்கப்படும்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்கப்படும். ஆதிதிராவிட பெண்களுக்கு விடிவெள்ளி வாழ்வாதார திட்டம் தொடங்கப்படும். வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நந்தனத்தில் ஒரு டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம் அமைக்கப்படும். ஆதிதிராவிடர்களை தொழில் முனைவோராக்க ஒரு சிறப்பு திட்டம் உருவாக்கப்படும். சமூக நீதித் துறையின் திட்டங்களை ஒருங்கிணைத்து திறம்பட செயல்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர சரிநிகர் திட்டங்கள் கொண்டு வரப்படும். ஆதிதிராவிடர் விளைவிக்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டைப் பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஆதிதிராவிடர் பெண்களுக்கு சோலார் அடுப்பு வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்க ஒரு வேளாண் உற்பத்தி மையம் அமைக்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்க திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்கப்படும். ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி அளிக்கப்படும்.

ஆதிதிராவிடர்களுக்கு தொழில் முனைவு வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும். தூய்மைப் பணியாளர் நலக்குழு ஒன்று உருவாக்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு எளிதாக கடன் வழங்க வசதிகள் செய்து தரப்படும். பழங்குடியின மொழி குறித்த வகுப்புகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு கலைத் திறனை ஊக்குவிக்க சென்னையில் ஒரு கலைத்திறன் பட்டறை பயிற்சி அமைக்கப்படும். ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி திட்டம் வழங்கப்படும். ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு திட்டம் செயல்படுத்தப்படும். சமூக நீதி விடுதிகளில் கொசு வலைகள் அமைக்கப்படும்.

10,000 மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். MBC Welfare Board ஒன்று அமைக்கப்படும். மாணவர்களின் விடுதிக் கட்டணம் குறைக்கப்படும். சூப்பர் கேம்பஸ் திட்டம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version